திருப்பதி ஏழுமலையானுக்கு 250 ஏக்கர் விவசாய நிலம் தானம் 

April 12, 2023

திருப்பதி ஏழுமலையானுக்கு 250 ஏக்கர் விவசாய நிலத்தை விவசாயி ஒருவர் தானமாக வழங்கி உள்ளார். ஏழுமலையானுக்கு இந்தியா உட்பட உலகில் பல்வேறு நகரங்களில் அசையா சொத்துகள் அதாவது வீட்டுமனை, நிலங்கள் போன்றவை உள்ளன. மேலும், தங்கம், வைரம், வைடூரியம் என நகைகளும் உள்ளன. இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த விவசாயி முரளி, ஏழுமலையானுக்கு தனது 250 ஏக்கர் நிலத்தை வழங்க முடிவு செய்துள்ளார். இவருக்கு திருப்பதி மாவட்டம், டெக்கலி மற்றும் நெல்லூர் மாவட்டத்தில் சாய்தாபுரம் அருகே உள்ள போத்திகுண்டா […]

திருப்பதி ஏழுமலையானுக்கு 250 ஏக்கர் விவசாய நிலத்தை விவசாயி ஒருவர் தானமாக வழங்கி உள்ளார்.

ஏழுமலையானுக்கு இந்தியா உட்பட உலகில் பல்வேறு நகரங்களில் அசையா சொத்துகள் அதாவது வீட்டுமனை, நிலங்கள் போன்றவை உள்ளன. மேலும், தங்கம், வைரம், வைடூரியம் என நகைகளும் உள்ளன. இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த விவசாயி முரளி, ஏழுமலையானுக்கு தனது 250 ஏக்கர் நிலத்தை வழங்க முடிவு செய்துள்ளார். இவருக்கு திருப்பதி மாவட்டம், டெக்கலி மற்றும் நெல்லூர் மாவட்டத்தில் சாய்தாபுரம் அருகே உள்ள போத்திகுண்டா ஆகிய பகுதிகளில் 250 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இது தொடர்பாக விவசாயி முரளி திருப்பதிக்கு வந்து ஆந்திர மாநில தலைமை செயலாளர் ஜவஹர் ரெட்டி, தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி ஆகியோரிடம் தனது விருப்பத்தைக் கூறி நில ஆவணங்களை வழங்கினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu