அறிகுறி இல்லாவிட்டால் கரோனா பரிசோதனை வேண்டாம்: பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம்

November 28, 2022

மருத்துவமனைகளில் கர்ப்பிணிகள், அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு அறிகுறிகள் இல்லாவிட்டால் கரோனா பரிசோதனை தேவை இல்லை என்று தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பல மாதங்களுக்கு முன்பே கரோனா கட்டுப்பாடுகளை தமிழக அரசு விலக்கியதோடு, தடுப்பூசி முகாம்களையும் நிறுத்திவிட்டது. ஆனால், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு கரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறை (டிபிஎச்) இயக்குநர் செல்வவிநாயகம், கரோனா பரிசோதனை தொடர்பாக புதிய […]

மருத்துவமனைகளில் கர்ப்பிணிகள், அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு அறிகுறிகள் இல்லாவிட்டால் கரோனா பரிசோதனை தேவை இல்லை என்று தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் பல மாதங்களுக்கு முன்பே கரோனா கட்டுப்பாடுகளை தமிழக அரசு விலக்கியதோடு, தடுப்பூசி முகாம்களையும் நிறுத்திவிட்டது. ஆனால், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு கரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறை (டிபிஎச்) இயக்குநர் செல்வவிநாயகம், கரோனா பரிசோதனை தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளார்.

அதில், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் அனைத்து நோயாளிகளுக்கும் கரோனா பரிசோதனை (ஆர்டி-பிசிஆர்) தேவை இல்லை. குறிப்பாக, அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோருக்கு கூட அறிகுறிகள் இருந்தால் மட்டும் கரோனா பரிசோதனை செய்தால் போதும். அறிகுறிகள் இல்லாவிட்டால் கரோனா பரிசோதனை அவசியம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu