விண்வெளியில் பல்வேறு ஆச்சரிய நிகழ்வுகள் கண்டறியப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், 2 கோள்கள் ஒரே சுற்றுவட்டப் பாதையை பகிர்ந்து வருவதற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பல ஆண்டுகளாக இரு கோள்கள் ஒரே சுற்றுவட்ட பாதையை பகிர்ந்து கொள்வது சாத்தியம் எனக் கூறப்பட்டு வந்தது. ஆனாலும், இது நிரூபிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், புதன்கிழமை இரு கோள்கள் ஒரே சுற்றுவட்ட பாதையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிலி நாட்டில் உள்ள தொலைநோக்கியின் மூலம் இது கண்டறியப்பட்டுள்ளது. பூமியிலிருந்து 370 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள சென்டாரஸ் விண்மீன் கூட்டத்தில் உள்ள நட்சத்திரம் ஒன்றை, இரு கிரகங்கள் ஒரே பாதையில் சுற்றி வருவது கண்டறியப்பட்டுள்ளது. தத்துவார்த்த ரீதியாக ‘சுற்றுவட்ட பாதை பகிர்வு’ நிரூபிக்கப்பட்டாலும், உண்மையில் அதற்கான ஆதாரம் இல்லாமல் இருந்தது. தற்போது அது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.