மதுரையில் நடைபெறும் இரட்டை ரயில் பாதை பணிகள் காரணமாக ரயில்கள் ரத்து

February 17, 2023

மதுரை ரயில் நிலையத்தில் இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் நிறைவடைந்தால், ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும் எனவும், கூடுதல் ரயில்களை இயக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த பணிகள் காரணமாக, ரயில் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, மார்ச் 7ஆம் தேதி வரை, 16731, 06702, 06701, 06663 ஆகிய ரயில்களும், மார்ச் 6ஆம் தேதி வரை, 16732, 06664, 06648, 06687 ஆகிய ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன. மேலும், […]

மதுரை ரயில் நிலையத்தில் இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் நிறைவடைந்தால், ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும் எனவும், கூடுதல் ரயில்களை இயக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த பணிகள் காரணமாக, ரயில் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, மார்ச் 7ஆம் தேதி வரை, 16731, 06702, 06701, 06663 ஆகிய ரயில்களும், மார்ச் 6ஆம் தேதி வரை, 16732, 06664, 06648, 06687 ஆகிய ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன.

மேலும், இன்றிலிருந்து மார்ச் 7 வரையிலான காலகட்டத்தில் இயக்கப்படும் பல விரைவு ரயில்கள் குறிப்பிட்ட சில நாட்களில் ரத்து செய்யப்படுகின்றன. எந்தெந்த நாட்களில், எந்தெந்த ரயில்கள் ரத்து செய்யப்படும் என்பது குறித்த விரிவான தகவல்களை ரயில்வே துறை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, ராமேஸ்வரம் திருப்பதி விரைவு ரயில், ராமேஸ்வரம் கன்னியாகுமரி விரைவு ரயில், சென்னை காரைக்குடி பல்லவன் விரைவு ரயில், மதுரை சென்னை மஹால் விரைவு ரயில், சென்னை சென்ட்ரல் மதுரை விரைவு ரயில், புதுச்சேரி கன்னியாகுமரி விரைவு ரயில், தாம்பரம் நாகர்கோயில் விரைவு ரயில், நாகர்கோவில் கோயம்புத்தூர் விரைவு ரயில், திருச்சி திருவனந்தபுரம் இன்டர்சிட்டி விரைவு ரயில், பெங்களூரு நாகர்கோயில் விரைவு ரயில், சென்னை நாகர்கோயில் விரைவு ரயில், கோயம்புத்தூர் மதுரை விரைவு ரயில், திருநெல்வேலி ஈரோடு விரைவு ரயில், விழுப்புரம் மதுரை விரைவு ரயில், வைகை விரைவு விரைவு ரயில், பாண்டியன் விரிவறையில் திருச்செந்தூர் விரைவு ரயில், நெல்லை விரைவு ரயில், பொதிகை விரைவு ரயில், சென்னை கொல்லம் ரயில், குருவாயூர் விரைவு ரயில், தேஜாஸ் அதிவிரைவு ரயில்கள் ஆகியவையும் இந்தப் பட்டியலில் உள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu