பிரான்ஸ் நாட்டில், அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அரசுக்கு எதிராக கிளர்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும், அந்நாட்டின் பாராளுமன்றத்தில், அரசை எதிர்த்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. அதில், வெறும் 9 வாக்குகள் வித்தியாசத்தில் அதிபர் இமானுவேலின் அரசு வெற்றி பெற்றுள்ளது. இந்த செய்தி வெளியானதை தொடர்ந்து, பிரான்ஸ் நாட்டில் வன்முறை வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதுவரையில் 12க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிரான்ஸ் நாட்டில், பணி ஓய்வு பெறுவதற்கான வயது உச்ச வரம்பை, மேலும் 2 ஆண்டுகள் அதிகரித்து 64 ஆக நிர்ணயம் செய்யப்பட இருந்தது. இதற்கு பல்வேறு தரப்புகளிலும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.














