தமிழகத்தில் பட்டியலிடப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கப்படுகிறது
தமிழ்நாட்டில் பட்டியலிடப்பட்ட இன மக்களின் சமூக முன்னேற்றத்திற்காக, ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தங்களின் முழு விவரங்களுடன் www.tn.gov.in/ta/forms/Deptname/1 என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து அனுப்பலாம். இந்த விருது, அந்த சமூகத்திற்கு அரிய தொண்டு செயல்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வழங்கப்படுகிறது. தமிழ் நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்து விருதுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, சிறந்த தொண்டு செய்யும் ஒருவருக்கு இந்த விருது வழங்கப்படும். இந்த விருதானது அவர்களின் தியாகத்திற்கு பாராட்டாக வழங்கப்படுகிறது.