டி.ஆர். காங்கோவில் முதல் பெண் பிரதமர் பதவியேற்பு

June 12, 2024

டி.ஆர். காங்கோவின் முதல் பெண் பிரதமராக ஜூடித் சுமின்வா துலுகா இன்று பதவியேற்றார். காங்கோ ஜனநாயக குடியரசில் கடந்த டிசம்பர் மாதம் அதிபர் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் யூடிபிஎஸ் கட்சி தலைவர் பெலிக்ஸ் மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆளும் கட்சி மெஜாரிட்டி பெரும்பான்மை பெற்றது. ஆனால் கூட்டணி கட்சிகள் இடையே கருத்து வேறுபாடு நிலவியதால் புதிய அரசு அமைக்க தாமதமானது. இந்நிலையில், கூட்டணி கட்சிகள் ஒன்றுபட்டதால் கடந்த மே மாதம் புதிய அரசு […]

டி.ஆர். காங்கோவின் முதல் பெண் பிரதமராக ஜூடித் சுமின்வா துலுகா இன்று பதவியேற்றார்.

காங்கோ ஜனநாயக குடியரசில் கடந்த டிசம்பர் மாதம் அதிபர் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் யூடிபிஎஸ் கட்சி தலைவர் பெலிக்ஸ் மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆளும் கட்சி மெஜாரிட்டி பெரும்பான்மை பெற்றது. ஆனால் கூட்டணி கட்சிகள் இடையே கருத்து வேறுபாடு நிலவியதால் புதிய அரசு அமைக்க தாமதமானது. இந்நிலையில், கூட்டணி கட்சிகள் ஒன்றுபட்டதால் கடந்த மே மாதம் புதிய அரசு அமைப்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி பிரதமர், 6 துணை பிரதமர்கள் மற்றும் 10 இணை மந்திரிகள் உட்பட 55 உறுப்பினர்களைக் கொண்ட மந்திரி சபை அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்..

பிரதமராக ஜூடித் சுமின்வா துலுகா இன்று பதவியேற்றார். அவருடைய செயல் திட்டத்திற்கு உறுப்பினர்கள் அனைவரும் பெரும்பான்மையாக ஒப்புதல் அளித்ததையடுத்து இன்று அதிகாரப்பூர்வமாக பதவியேற்பு விழா நடைபெற்றது. இதன் மூலம் நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu