தமிழ்நாடு அரசின் கல்வி கொள்கை குறித்து வரைவு அறிக்கை 2023 ஜனவரியில் முதலமைச்சரிடம் தாக்கல் செய்யப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஈரோட்டில் எழுத்தறிவு திட்ட தன்னார்வல ஆசியர்களுக்கான பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் , தமிழகம் முழுவதும் நடைபெற்று வந்த மாநிலத்தின் புதிய கல்வி கொள்கை குறித்து ஆய்வுகள் முடிவடைந்துள்ளதாக கூறினார். தற்போது தனியார் பள்ளி சங்கங்கள் போன்ற கல்வித்துறை சார்ந்த கருத்துகள் கேட்கப்பட்டு வருகிறது.
இந்த பணிகள் இம்மாதத்தில் முடிவடையும் என்றும், புதிய கல்வி கொள்கைகள் குறித்து வரைவு வரும் ஜனவரி மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அளிக்கப்படும் என்றார். உரிய ஆய்வுகளுக்கு பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் புதிய கல்வி கொள்கை குறித்து அறிவிப்பாணையை வெளியிடுவார் என்று அன்பில் மகேஷ் தெரிவித்தார்.