அண்மையில் நடைபெற்ற மந்திரிகளின் கூட்டத்தில், 12% மற்றும் 28% அடுக்கு வரிகளை நீக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்டபடி, ஜிஎஸ்டி முறையில் பெரிய மாற்றம் வர இருக்கிறது. அண்மையில் நடைபெற்ற மந்திரிகளின் கூட்டத்தில், 12% மற்றும் 28% அடுக்கு வரிகளை நீக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இனிமேல் 5% மற்றும் 18% ஆகிய இரண்டு அடுக்கில்தான் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்.
இந்த மாற்றத்தால் சுமார் 90% பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக, 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் செப்டம்பர் 3 மற்றும் 4-ந்தேதிகளில் டெல்லியில் நடைபெறவுள்ளது. இறுதி முடிவுகள் எடுக்கப்பட்ட பின், புதிய வரி முறைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு செப்டம்பர் 22-க்குள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. நவராத்திரி பண்டிகைக்கு முன்னதாகவே இது நடைமுறைக்கு வர வாய்ப்பு உள்ளது.