ஃபேண்டஸி விளையாட்டுக்களின் தளமான ட்ரீம் 11, கடந்த 2022 ம் நிதி ஆண்டில் 50% வருவாய் உயர்வை பதிவு செய்துள்ளது. அதே வேளையில், நிறுவனத்தின் செலவுகள் 70% உயர்ந்துள்ளது. எனவே, மொத்தமாக, நிறுவனத்தின் லாபம் பாதி அளவுக்கும் கீழாக குறைந்துள்ளது.
ட்ரீம் 11 சமர்ப்பித்துள்ள அறிக்கையின் படி, நிறுவனத்தின் நிகர வருவாய் 3840.75 கோடி ரூபாய் ஆகும். மேலும், நிறுவனத்தின் செலவுகள் 3762.4 கோடியாக உயர்ந்ததால், நிறுவனத்தின் நிகர லாபம் 142.86 கோடியாக பதிவாகியுள்ளது. இதுவே, கடந்த 2021 ம் நிதியாண்டில் 327.59 கோடி ரூபாய் லாபம் பதிவானது குறிப்பிடத்தக்கது. எனவே, நிறுவனம் செலுத்தும் வரி 170.49 கோடியில் இருந்து 159.77 கோடியாக குறைந்துள்ளது.
செலவுகளைப் பொறுத்தவரை, விளம்பரத்திற்கான செலவுகள் 73% உயர்ந்து, 2158.29 கோடியாக பதிவாகியுள்ளது. மேலும், நிறுவனத்தின் பணியாளர் நலன் சார்ந்த செலவுகள் 80% உயர்ந்துள்ளது.