தமிழகத்தில் மருந்தகங்களில் பணிபுரிவோருக்கு ஆடை கட்டுப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சுமார் 40 ஆயிரம் சில்லறை மருந்து கடைகள் மற்றும் மருந்தகங்கள் உள்ளன. இவற்றில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்த மருந்தகங்களில் பணிபுரியும் மருந்தாளுநர்கள் வெண்ணிற அங்கி, அடையாள அட்டைஅணிகின்றனர். ஆனால் சில்லறை மருந்துக் கடைகள் மற்றும் சில மருந்தகங்களில் மருந்தாளுநர்கள் வெண்ணிற அங்கி மற்றும் அடையாள அட்டையை அணிவதில்லை.
இதுகுறித்து மருந்துக்கட்டுப்பாட்டு இயக்குனர் விஜயலட்சுமி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், மாநிலத்தில் உள்ள அனைத்து சில்லரை மருந்து கடைகள், மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகளுடன் இணைந்த மருந்தகங்களில் பணிபுரியும் மருந்தாளுனர்கள் பணி நேரங்களில் கட்டாயம் வெண்ணிற அங்கி மற்றும் அடையாள அட்டையை அணிந்து பணிபுரிய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.