8 போக்குவரத்துக் கழகங்களில் 3,274 டிரைவர்-கண்டக்டர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு போக்குவரத்துத் துறையின் கீழ் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மற்றும் விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோவை, மதுரை, நெல்லை கோட்டங்களில் செயல்படும் 8 போக்குவரத்துக் கழகங்களில் 3,274 டிரைவர்-கண்டக்டர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 364 பணியிடங்கள் மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் 318 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மற்ற மண்டலங்களில் விழுப்புரம் (322), கும்பகோணம் (756), சேலம் (486), கோவை (344), மதுரை (322), நெல்லை (362) என மொத்தமாக 3,274 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.விண்ணப்பிக்க விரும்புவோர் www.arasubus.tn.gov.in என்ற இணையதளத்தின் வழியாக மார்ச் 21 (இன்று) மதியம் 1 மணி முதல் ஏப்ரல் 21 (திங்கட்கிழமை) மதியம் 1 மணி வரை விண்ணப்பிக்கலாம்.