உக்ரைன் சுதந்திர தினத்தில் ரஷிய அணு மின் நிலையம் மீது டிரோன் தாக்குதல்

August 25, 2025

ரஷியாவின் குர்ஷ்க் பகுதியில் அமைந்துள்ள அணு மின் நிலையம் மீது டிரோன் தாக்குதல் நடந்துள்ளது. உக்ரைன்-ரஷியா போர் மூன்றாண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், சமாதான முயற்சிகள் தொடர்ச்சியாக தோல்வியடைகின்றன. இதற்கிடையில், உக்ரைன் தனது 34வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நாளில், ரஷியாவின் குர்ஷ்க் பகுதியில் அமைந்துள்ள அணு மின் நிலையம் மீது டிரோன் தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலால் நிலையத்தின் ஒரு பகுதி எரிந்ததாகவும், உடனடியாக தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்ததாகவும் […]

ரஷியாவின் குர்ஷ்க் பகுதியில் அமைந்துள்ள அணு மின் நிலையம் மீது டிரோன் தாக்குதல் நடந்துள்ளது.

உக்ரைன்-ரஷியா போர் மூன்றாண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், சமாதான முயற்சிகள் தொடர்ச்சியாக தோல்வியடைகின்றன. இதற்கிடையில், உக்ரைன் தனது 34வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நாளில், ரஷியாவின் குர்ஷ்க் பகுதியில் அமைந்துள்ள அணு மின் நிலையம் மீது டிரோன் தாக்குதல் நடந்துள்ளது.

இந்த தாக்குதலால் நிலையத்தின் ஒரு பகுதி எரிந்ததாகவும், உடனடியாக தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்ததாகவும் ரஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது என்னவெனில், கடந்த மூன்று நாட்களாக தெற்கு ரஷியாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உக்ரைன் டிரோன் தாக்குதலால் எரிந்து கொண்டிருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu