சென்னையில் அதிகரிக்கும் போதை மாத்திரை விற்பனை

March 30, 2024

சென்னையில் போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கஞ்சா விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வாகன பரிசோதனை அடிப்படையில் போலீசார் போதை பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இதனால் போதை ஊசி, போதை மாத்திரை மற்றும் போதைப்பொருட்களை ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து வாங்கி சென்னையில் விற்பனை செய்து வருகின்றனர். இதில் படித்த இளைஞர்களும் அதிக அளவில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் கொரியர் சர்வீஸ் மூலமாக […]

சென்னையில் போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கஞ்சா விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வாகன பரிசோதனை அடிப்படையில் போலீசார் போதை பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இதனால் போதை ஊசி, போதை மாத்திரை மற்றும் போதைப்பொருட்களை ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து வாங்கி சென்னையில் விற்பனை செய்து வருகின்றனர். இதில் படித்த இளைஞர்களும் அதிக அளவில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் கொரியர் சர்வீஸ் மூலமாக இந்த மாத்திரைகளை குஜராத் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வாங்கி சப்ளை செய்து வருகிறார்கள். மருந்து சீட்டுகள் இல்லாமல் இந்த மாத்திரைகளை பயன்படுத்தக்கூடாது. இதனால் மருந்து கடைகளில் இந்த போதை மாத்திரைகளை நேரடியாக வாங்குவது சிரமமான விஷயமாக இருந்து வருகிறது. அதனால் சட்ட விரோதமாக இவை பார்சல் மூலம் அனுப்பப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மாத்திரையானது மருத்துவத் துறையில் தூக்கமின்மை மற்றும் வரை வலி நிவாரணக்காக பயன்படுத்தபடுகிறது .பொதுவாக போதை பொருட்களை பயன்படுத்தும் போது வாந்தி, தலை சுற்றல் போன்ற போதைக்கான அறிகுறிகள் காணப்படும். ஆனால் இவ்வகை மாத்திரைகளை பயன்படுத்துவதால் அது போன்ற அறிகுறிகள் ஏதும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அதிகளவில் இளைஞர்கள் பயன்படுத்தி வருகிறார்கள் என்ற தகவலும் வெளியாகி வருகிறது. மேலும் இவ்வகை போதை மாத்திரை விற்பனை 2021 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதனை முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu