இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் பாசில்கா மாவட்டத்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் சுனில் யாதவ், அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த கொலைக்கு நிழலுலக தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் கூட்டாளி ரோகித் கோடரா பொறுப்பேற்றுள்ளார். ரோகித் கோடரா கூறியபடி, சுனில் யாதவ், அங்கித் பாது என்கவுன்டரில் பஞ்சாப் போலீசாருடன் இணைந்து செயல்பட்டார். இதற்காக அவர் பழிவாங்கப்பட்டார். சுனில் யாதவ் லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பலைச் சேர்ந்தவர். போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக, அவர் பாகிஸ்தானுக்கு இடம் பெயர்ந்திருந்தார். சமீபத்தில் ராஜஸ்தான் காவல்துறை அவன் மீது ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிட்டது.