2025 மேஜர் லீக் டி20 தொடரில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் டூ பிளெசிஸ் சதம் அடித்து வெற்றியையும், புதிய உலக சாதனையையும் பெற்றார்.
அமெரிக்காவில் நடைபெறும் 2025 மேஜர் லீக் டி20 தொடரில் நேற்று டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் எம்.ஐ நியூயார்க் அணிகள் மோதின. முதல் பேட்டிங்கில் டெக்சாஸ் அணி 223 ரன்கள் எடுத்ததில் கேப்டன் டூ பிளெசிஸ் 103 ரன்கள் அடித்தார். பதிலுக்கு எம்ஐ நியூயார்க் 184 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் டூ பிளெசிஸ், டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக 8 சதங்கள் அடித்த ஒரே வீரராக மாறினார். இதன்மூலம் பாபர் அசாம் மற்றும் மைக்கேல் கிளிங்கர் ஆகியோர் சாதனைகளை மிஞ்சியுள்ளார். இது டூ பிளெசிஸின் புகழை மேலும் உயர்த்தியுள்ளது.