இரட்டை குடியுரிமை பிரச்சனைக்கு முடிவு : உறுதிமொழி படிவம் அறிமுகம்

September 14, 2022

இரட்டை குடியுரிமை பிரச்சனைக்கு முடிவு காணும் வகையில் எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், ஆயுர்வேத படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு தனியாக உறுதிமொழி படிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜிப்மர் மருத்துவக் கல்லுாரி மற்றும் புதுச்சேரி மருத்துவக் கல்லுாரிகளில் 'சென்டாக்' மூலம் நிரப்பப்படும் அரசு ஒதுக்கீட்டு இடங்களை இரட்டை குடியுரிமை பெற்றுள்ள மாணவர்கள் அபகரித்து வருவதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு உள்ளது. இதை தடுக்க தமிழ்நாடு, பஞ்சாப், ஹரியானா, சண்டிகார் உள்ளிட்ட பல மாநிலங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. ஆனால் சென்டாக் தகவல் குறிப்பேட்டில் […]

இரட்டை குடியுரிமை பிரச்சனைக்கு முடிவு காணும் வகையில் எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், ஆயுர்வேத படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு தனியாக உறுதிமொழி படிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஜிப்மர் மருத்துவக் கல்லுாரி மற்றும் புதுச்சேரி மருத்துவக் கல்லுாரிகளில் 'சென்டாக்' மூலம் நிரப்பப்படும் அரசு ஒதுக்கீட்டு இடங்களை இரட்டை குடியுரிமை பெற்றுள்ள மாணவர்கள் அபகரித்து வருவதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு உள்ளது.

இதை தடுக்க தமிழ்நாடு, பஞ்சாப், ஹரியானா, சண்டிகார் உள்ளிட்ட பல மாநிலங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. ஆனால் சென்டாக் தகவல் குறிப்பேட்டில் இரட்டை குடியுரிமை தொடர்பாக எந்த விதிமுறைகளும் குறிப்பிடப்படவில்லை.

இந்நிலையில், எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட நீட் மதிப்பெண் அடிப்படையிலான மாணவர் சேர்க்கையில் இரட்டை குடியுரிமை பிரச்னைக்கு இந்தாண்டு அதிகாரிகள் தீர்வு காணும் வகையில் மாணவர்களிடம் தனியாக உறுதிமொழி படிவம் பெற சென்டாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து படிவத்தை வெளியிட்டுள்ளது.

அதில் , 'பிற மாநிலங்களில் குடியுரிமை பெற்றிருக்கவில்லை. பிற மாநிலங்களில் மருத்துவ சீட் பெற விண்ணப்பிக்கவில்லை. தவறான, பொய்யான தகவல்களை தருவதன் மூலம் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அறிந்துள்ளேன்' என்று கூறப்பட்டுள்ளது.

இந்த உறுதிமொழி படிவத்தினை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்ய வேண்டும். அதில், எக்ஸிகியூட் மாஜிஸ்திரேட் அல்லது நோட்டரி முன்னிலையில் 20 ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டி, கையொப்பமிட்டு விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று சென்டாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu