10 ஆண்டுகால ப்ளூ விசாவை அறிமுகம் செய்த அமீரகம்

May 17, 2024

ஐக்கிய அரபு அமீரகம் 10 ஆண்டுகால விசா திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது ப்ளூ விசா என அழைக்கப்படுகிறது. ஐக்கிய அரபு அமீரகம் அறிமுகம் செய்துள்ள ப்ளூ விசா, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்து இயங்கும் தனிநபர்களுக்கு வழங்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக பணி செய்பவர்களுக்கும், அதிக பங்களிப்பு செய்தவர்களுக்கும், ப்ளூ விசா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ப்ளூ விசா வழங்கப்பட்டவர்கள் 10 ஆண்டுகள் வரை அமீரகத்தில் தங்கி இருக்க அனுமதிக்கப்படுகின்றனர். துபாய் பிரதமர் மற்றும் மன்னர் ஷேக் முகமது […]

ஐக்கிய அரபு அமீரகம் 10 ஆண்டுகால விசா திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது ப்ளூ விசா என அழைக்கப்படுகிறது.

ஐக்கிய அரபு அமீரகம் அறிமுகம் செய்துள்ள ப்ளூ விசா, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்து இயங்கும் தனிநபர்களுக்கு வழங்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக பணி செய்பவர்களுக்கும், அதிக பங்களிப்பு செய்தவர்களுக்கும், ப்ளூ விசா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ப்ளூ விசா வழங்கப்பட்டவர்கள் 10 ஆண்டுகள் வரை அமீரகத்தில் தங்கி இருக்க அனுமதிக்கப்படுகின்றனர். துபாய் பிரதமர் மற்றும் மன்னர் ஷேக் முகமது பின் ராஷித், ப்ளூ விசா பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். சர்வதேச அளவில் காலநிலை மாற்றம் குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், அமீரகத்தின் ப்ளூ விசா திட்டம் கவனம் பெற்றுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu