இந்தியாவில் எல்நினோ மாற்றம் காரணமாக இந்த ஆண்டு குறைவாகவே மழை பெய்யும்

April 11, 2023

இந்தியாவில் எல்நினோ மாற்றம் காரணமாக இந்த ஆண்டு இயல்புக்கும் குறைவாகவே மழை பெய்யும் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பெய்யும் மழையின் அளவை பொறுத்தும், வான் மண்டலத்தில் உருவாகும் ஈரபதத்தின் அடிப்படையிலும் இந்த ஆண்டு எவ்வளவு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்பதை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கும். அதன்படி இந்த ஆண்டு இந்தியாவில் 94 சதவீதம் அளவுக்கே மழை பெய்யும் என்று ஸ்கைமேட் என்ற தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு காலநிலை மாற்றத்தில் […]

இந்தியாவில் எல்நினோ மாற்றம் காரணமாக இந்த ஆண்டு இயல்புக்கும் குறைவாகவே மழை பெய்யும் என்று கூறப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் பெய்யும் மழையின் அளவை பொறுத்தும், வான் மண்டலத்தில் உருவாகும் ஈரபதத்தின் அடிப்படையிலும் இந்த ஆண்டு எவ்வளவு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்பதை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கும். அதன்படி இந்த ஆண்டு இந்தியாவில் 94 சதவீதம் அளவுக்கே மழை பெய்யும் என்று ஸ்கைமேட் என்ற தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு காலநிலை மாற்றத்தில் ஏற்பட்ட தாக்கமே காரணம் என்றும் தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆசிய நாடுகளில் இந்த ஆண்டு வறண்ட வானிலை காணப்படும். இதற்கு எல்நினோ மாற்றம் அதிகரித்து வருவதே காரணம். பருவ மழை இயல்பை காட்டிலும் குறைவாக பெய்தால் அது விவசாயிகளை பெரிதும் பாதிக்கும் என்பதால் அதற்கேற்ப அவர்கள் சாகுபடி பணிகளில் ஈடுபடவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu