தமிழகத்தின் பல மாவட்டங்களில் மின் மீட்டர் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், இதனால் பல கோடி மதிப்பிலான கட்டுமான பணிகள் அனைத்தும் முடங்கி உள்ளதாகவும், கட்டுமான தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தற்போது மின்சாரம் இருந்தால் தான் எந்த வேலையும் செய்ய முடியும் என்ற சூழல் நிலவி உள்ளது. புதிய கட்டுமான பணிகள் அனைத்தும் மின்மீட்டர் இல்லாததால் பாதியில் முடங்கி உள்ளன. இதனால் பொதுமக்கள் முதல் கட்டுமான தொழிலாளர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.