கூகுள் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்களின் கூட்டணியில் டன்சோ துரித வர்த்தக நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில், செலவுகளை குறைக்கும் நடவடிக்கையாக புதிய சுற்றுப் பணி நீக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஜூன் மாதம் முதல், டன்சோ ஊழியர்களுக்கு முறையான சம்பளம் வழங்கப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. எனவே, நிறுவனத்தின் செலவுகளை குறைக்கும் நடவடிக்கையாக, புதிய சுற்று பணி நீக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை பணிநீக்கம் செய்யப்படுவோருக்கு, ஜனவரி மாதத்தில் முழுமையான சம்பளத் தொகை செலுத்தப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. ஊழியர்களுக்கு இது தொடர்பாக முன்னதாகவே அறிவிப்பு வெளியிடப்படும் எனவும், அவர்கள் விரும்பினால் அக்டோபர் மாதம் முதல் பணியில் தொடர்ந்து ஈடுபடலாம் எனவும் டன்சோ நிறுவனம் தெரிவித்துள்ளது.