ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் பெறும் நடைமுறையை அமல்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
கோடை காலம் என்பதால் ஊட்டி மற்றும் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது போன்ற சூழ்நிலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கோடை மற்றும் விடுமுறை காலகட்டமான மே மாதத்தில் சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு இ-பாஸ் பெறும் நடைமுறையை அமல்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் வெளியூரில் இருந்து கொடைக்கானல் செல்வோர் இ பாஸ் பெறும் நடைமுறை அமலில் இருந்ததை தொடர்ந்து தற்போது உள்ளூர் மக்களும் ஒருமுறை கட்டாயம் இ பாஸ் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்வோர் epass.tnega.org என்ற இணையதளத்தில் இ பாஸ் பெறலாம். இந்த நடைமுறை மே 30ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது