இந்திய அஞ்சல் வங்கி உள்ளிட்ட துறைகளுடன் இணைந்து ரேஷன் கடைகளில் இ-சேவை மையம்

April 12, 2023

இந்திய அஞ்சல் வங்கி உள்ளிட்ட துறைகளுடன் இணைந்து ரேஷன் கடைகளில் விரைவில் ஆதார், பாஸ்போர்ட் சேவை துவங்க இருப்பதாக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் கூட்டுறவு துறை மூலம் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் மலிவு விலையில் விற்கப்படுகிறது. இதன் மூலம் இந்த துறைக்கு போதிய வருமானம் வருவது இல்லை என்றாலும் பொதுமக்களின் அத்தியாவசிய சேவையாக […]

இந்திய அஞ்சல் வங்கி உள்ளிட்ட துறைகளுடன் இணைந்து ரேஷன் கடைகளில் விரைவில் ஆதார், பாஸ்போர்ட் சேவை துவங்க இருப்பதாக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் கூட்டுறவு துறை மூலம் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் மலிவு விலையில் விற்கப்படுகிறது. இதன் மூலம் இந்த துறைக்கு போதிய வருமானம் வருவது இல்லை என்றாலும் பொதுமக்களின் அத்தியாவசிய சேவையாக கருதி இதனை அரசு செய்து வருகிறது. இந்நிலையில், இந்த கடைகளை மக்களுக்கு பயனுள்ள வகையிலும், அரசுக்கு வருவாய் ஈட்டித்தரும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் ரேஷன் கடைகளுடன் இ-சேவை மையங்களை தொடங்க கூட்டுறவு துறை திட்டமிட்டுள்ளது. அடுத்த 6 மாதத்தில் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளிலும் இ-சேவை மையமும் செயல்படும் வகையில் மாற்றி அமைக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் முன்னோடி திட்டமாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu