20% எத்தனால் கலந்த பெட்ரோல் - சில்லறை பயன்பாட்டிற்கு வெளியீடு

February 6, 2023

20% அளவிற்கு எத்தனால் கலந்த பெட்ரோல் இன்று முதல் சில்லறை பயன்பாட்டிற்கு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவின் 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இன்று முதல் இந்த பெட்ரோல் விற்பனைக்கு வெளிவந்துள்ளது. கார்பன் வெளியேற்றத்தை குறைக்கும் நோக்கில், பயோ எரிபொருள் பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது. மேலும், இதன் மூலம், வெளிநாட்டு எரிபொருள் இறக்குமதி குறையும் என்று நம்பப்படுகிறது. அதன் பகுதியாக, தற்போது, 20% எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், பெட்ரோலுடன் 10% அளவிற்கு எத்தனால் கலக்கப்படுகிறது. […]

20% அளவிற்கு எத்தனால் கலந்த பெட்ரோல் இன்று முதல் சில்லறை பயன்பாட்டிற்கு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவின் 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இன்று முதல் இந்த பெட்ரோல் விற்பனைக்கு வெளிவந்துள்ளது. கார்பன் வெளியேற்றத்தை குறைக்கும் நோக்கில், பயோ எரிபொருள் பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது. மேலும், இதன் மூலம், வெளிநாட்டு எரிபொருள் இறக்குமதி குறையும் என்று நம்பப்படுகிறது. அதன் பகுதியாக, தற்போது, 20% எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், பெட்ரோலுடன் 10% அளவிற்கு எத்தனால் கலக்கப்படுகிறது. இதனை, அனைத்து தரப்பிலும் 20% ஆக உயர்த்த 2025 ஆம் ஆண்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவின் எரிசக்தி வாரத்தை முன்னிட்டு, இன்று முதல், 20% எத்தனால் கலந்த பெட்ரோல் சில்லறை பயன்பாட்டிற்கு வெளியிடப்படுகிறது. இந்த நிகழ்வில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "கடந்த 2014 ல், பெட்ரோலில் 1.5% எத்தனால் கலக்கப்பட்ட நிலையில், தற்போது அது 10% ஆக உயர்ந்துள்ளது. இதனை 20% ஆக உயர்த்தும் பாதையில் இந்தியா ஈடுபட்டுள்ளது. முதற்கட்டமாக, இந்தியாவின் 15 நகரங்களில் இது செயல்பாட்டுக்கு வரும். அடுத்த 2 ஆண்டுகளில், நாடு தழுவிய முறையில் செயல்படுத்தப்படும்" எனத் தெரிவித்தார். இந்தத் திட்டம், கரும்பு விவசாயிகளுக்கு கூடுதல் வருவாயை ஈட்டித் தருவதால், பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu