அமெரிக்க வெளியுறவு மந்திரி அந்தோணி பிளிங்கன், ஜெயசங்கருடன் சந்திப்பு பற்றிய தகவல்களை எக்ஸ் சமூக ஊடகத்தில் பகிர்ந்தார்.
இத்தாலியின் பியுக்கி நகரில் நடைபெறும் ஜி 7 வெளியுறவு துறை மந்திரிகளின் கூட்டத்தில் பங்கேற்க மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் இத்தாலிக்கு பயணம் செய்துள்ளார். அமெரிக்கா, இத்தாலி மற்றும் பிற நாடுகளின் வெளியுறவு மந்திரிகளும் அந்நாட்டிற்கு வந்துள்ளனர். இந்நிலையில், ஜெயசங்கர், இத்தாலியின் துணை பிரதமரும் வெளியுறவு மந்திரியுமான ஆன்டனியோ தஜானியை நேரில் சந்தித்து, தொழில்நுட்பம், பசுமை எரிசக்தி, ரெயில்வே, முதலீடுகள் மற்றும் பிற பல்வேறு துறைகளில் உள்ள வாய்ப்புகளைப் பற்றி விவாதித்ஹார். அமெரிக்க வெளியுறவு மந்திரி அந்தோணி பிளிங்கன், ஜெயசங்கருடன் சந்திப்பு பற்றிய தகவல்களை எக்ஸ் சமூக ஊடகத்தில் பகிர்ந்தார். மேலும் இந்தியா மற்றும் அமெரிக்கா இணைந்து செயல்படுவதால் வலிமையாக இருப்பதாக குறிப்பிட்டார்.