அதிகளவு நிலத்தடி நீரை எடுப்பதால் பூமி கிழக்கே சாய்ந்து உள்ளது - விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

June 19, 2023

அதிகளவு நிலத்தடி நீரை எடுப்பதால் பூமி கிழக்கே சாய்ந்து உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளது. பூமியில் இருந்து மனிதர்களால் அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு வருகிறது. பூமி 1993 மற்றும் 2010 ஆண்டுகளுக்கு இடையில் கிட்டத்தட்ட 80 சென்டிமென்டர் கிழக்கே சாய்ந்து உள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். இதன் காரணமாக பூமியின் காலநிலையில் பெரிய பாதிப்புகள் ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளனர். ஜியோபிசிகல் ரிசர்ச் லெட்டர்ஸ் என்னும் இதழில், 1993ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை […]

அதிகளவு நிலத்தடி நீரை எடுப்பதால் பூமி கிழக்கே சாய்ந்து உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளது.

பூமியில் இருந்து மனிதர்களால் அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு வருகிறது. பூமி 1993 மற்றும் 2010 ஆண்டுகளுக்கு இடையில் கிட்டத்தட்ட 80 சென்டிமென்டர் கிழக்கே சாய்ந்து உள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். இதன் காரணமாக பூமியின் காலநிலையில் பெரிய பாதிப்புகள் ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

ஜியோபிசிகல் ரிசர்ச் லெட்டர்ஸ் என்னும் இதழில், 1993ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை மட்டும் 2,150 ஜிகா டன் நிலத்தடி நீர் மனிதர்களால் உறிஞ்சப்பட்டு உள்ளது. இது 6 மில்லிமீட்டருக்கும் அதிகமான கடல் மட்ட உயர்வுக்கு சமம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பூமியின் சுழற்சி துருவமானது பொதுவாக ஒரு வருடத்திற்குள் பல மீட்டர்கள் மாறுவதால் நிலத்தடி நீர் எடுப்பதன் காரணமாக ஏற்படும் மாற்றங்கள் பருவங்களை மாற்றுவதற்கான எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu