பூமி அளவிலான புதிய புறக்கோள் கண்டுபிடிப்பு

பூமி அளவிலான புதிய புறக்கோள் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பூமியிலிருந்து மிகவும் அருகில் அதாவது 40 ஒளி ஆண்டுகள் தொலைவில் மீனம் விண்மீன் கூட்டத்தில் இந்தக் கோள் அமைந்துள்ளதாக கூறுகின்றனர். இதற்கு Gliese 12b என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தக் கோளில் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். எனவே, இந்த கோளின் கண்டுபிடிப்பு விஞ்ஞானிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது பற்றிய ஆய்வு அறிக்கை தி ராயல் அஸ்ட்ரானமிக்கல் சொசைட்டி இதழில் வெளியாகியுள்ளது. பூமியை விட […]

பூமி அளவிலான புதிய புறக்கோள் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பூமியிலிருந்து மிகவும் அருகில் அதாவது 40 ஒளி ஆண்டுகள் தொலைவில் மீனம் விண்மீன் கூட்டத்தில் இந்தக் கோள் அமைந்துள்ளதாக கூறுகின்றனர். இதற்கு Gliese 12b என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தக் கோளில் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். எனவே, இந்த கோளின் கண்டுபிடிப்பு விஞ்ஞானிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது பற்றிய ஆய்வு அறிக்கை தி ராயல் அஸ்ட்ரானமிக்கல் சொசைட்டி இதழில் வெளியாகியுள்ளது.

பூமியை விட சிறியதாகவும், வெள்ளி கோளின் அளவிலும் Gliese 12b உள்ளது. இதன் மேற்பரப்பு வெப்பநிலை 107 டிகிரி பாரன்ஹீட் ஆகும். பூமியின் சராசரி வெப்பநிலையை விட இது அதிகம் தான் என்றாலும், இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மற்ற புறக்கோள்களை விட குறைவான வெப்பநிலை கொண்டுள்ளது. எனவே, திரவ நிலையில் தண்ணீர் இருப்பதற்கான சாத்திய கூறுகள் இந்த கோளில் அதிகம் உள்ளது என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இது தொடர்பான தீவிர ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu