அந்தமான் நிக்கோபார் தீவில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது
அந்தமான் நிக்கோபார் தீவில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகியுள்ளது. இது குறித்து தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின் படி புதன்கிழமை காலை 7:53 அணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது கடல் பகுதியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதம், பொருள் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும், ஜப்பான் இந்தோனேஷியாவை தொடர்ந்து இப்போது அந்தமான் நிக்கோபார் தீவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.