சத்தீஸ்கரில் 3.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் அம்பிகாபூரில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. 3.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.மேலும் இந்த நில அதிர்வால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கட்டிடங்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.