இந்தியாவால் மியான்மருக்கு 15 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.
மியான்மர் மற்றும் தாய்லாந்து நாடுகளில் நேற்று நண்பகலில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. மியான்மரின் மண்டலே நகரில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டது, பின்னர் 6.4 ரிக்டரில் மீண்டும் அதிர்வு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், மேலும் 730க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் நடப்பில் உள்ளன.
இந்தியாவால் மியான்மருக்கு 15 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்திய விமானப்படை விமானம் மூலம் கூடாரங்கள், உணவு, தண்ணீர் சுத்திகரிப்பான்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் மீட்புக்குழுவுடன் அந்த நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.