மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1000கும் மேற்பட்டவர்கள் பலியாகினர்.
மியான்மர் மற்றும் தாய்லாந்தில் நேற்று காலை 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மரின் மண்டலே நகரை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது, அதன் பின்னர் 12 நிமிடங்களுக்குள் 6.4 ரிக்டர் அளவில் மீண்டும் நிலஅதிர்வு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பல கட்டிடங்களையும் வீடுகளையும் இடிந்து விழுத்து, குறிப்பாக மியான்மரில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக 1000-க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும், 2376 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் மியான்மரின் ராணுவ ஆட்சிக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கப்படுகின்றன.
தமிழர்கள் தொடர்பு கொள்ள உதவி எண்கள்:
1800 309 3793,
+91 80690 09901,
+91 80690 09900.