நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளது.
நேபாளத்தின் பஜுரா மாவட்டத்தில் இன்று பிற்பகல் 1.45 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகி உள்ளது. நேபாளத்தில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் டெல்லி- என்சிஆர் பகுதியிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. முன்னதாக ஜனவரி 24ம் தேதி நேபாளத்தில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் வீடு இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 3 வீடுகள் இடிந்து விழுந்து சேதமாகின.














