வடமேற்கு சீனாவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 116 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவின் வடமேற்கு பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிட்டர் அளவில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. கான்சு மாகாணத்தில் 100 பேர் உயிரிழந்ததாகவும், கிங்காய் மாகாணத்தில் 16 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் பலர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் போக்குவரத்து, மின்சாரம், தகவல் தொடர்பு கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளன. இந்த நிலநடுக்கம் கான்சு மாகாணத்தின் ஜிஷிஷான் என்னும் இடத்தில் ஏற்பட்டது. இது கிங்காய் மாகாணத்தில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.














