பிலிப்பைன்ஸில் இன்று திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் மின் டானோ பகுதியில் திடீரென்று இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதில் உயிர்சேதம்,பொருள் சேதம் குறித்த எந்த தகவலும் வெளியிடவில்லை. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவாகியுள்ளது. மேலும் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளது.