ஆப்கானிஸ்தானில் 5.3 ரிட்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிட்டர் அளவில் 5.3 ஆக பதிவாகியுள்ளது என்று புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரின் தெற்கு திசையில் 632 கிலோமீட்டர் தொலைவில், பலோஜிஸ்தானின் நுஸ்கி பகுதியில் இருந்து 65 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலநடுக்கத்தின் மையப்பகுதி இருந்துள்ளது. சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப்பகுதி இருந்ததால் சுற்றுவட்டார பகுதிகளில் நில அதிர்வு பலமாக உணரப்பட்டது. எனினும் பெரிய சேதாரம் எதுவும் ஏற்படவில்லை என்று தகவல்கள் கூறியுள்ளன. இந்த நிலநடுக்கத்தில் யாரும் பலியானதாக தகவல் இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஆப்கானிஸ்தானில் இரண்டு நாட்களுக்கு முன்பு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.














