நேபாளத்தின் மேற்கு பகுதியில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டது.
நேபாளத்தின் மேற்கு பகுதியில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. முதல்முறை 5.3 என்ற அளவில், இரண்டாவது முறை 6.3 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. மூன்றாவது முறை நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 4.1 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கம் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதில் ஏற்பட்ட விபத்தில் ஐந்து பேர் காயமடைந்தனர். கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டது. பல வீடுகள் இடிந்து விழுந்து சேதம் ஆகியுள்ளன. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் இந்தியாவிலும் காணப்பட்டது. உத்தர்கன்ட் மற்றும் டில்லி பகுதிகளில் நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹெச் என் பி மத்திய பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை பேராசிரியர் மகாவீர் கூறுகையில் இந்த சிறிய நிலநடுக்கங்கள் பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட இருப்பதை எச்சரிக்கின்றன என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாம் விழிப்புடன் இருப்பது அவசியமாகும். நிலநடுக்கத்தை தாங்கும் வகையிலான கட்டிடங்களை கட்ட வேண்டும் என்று கூறினார்.