இந்தோனேசியாவில் உள்ள தலாட் தீவுகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவாகியுள்ளது.
இந்தோனேசியாவில் உள்ள தலாட் தீவுகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவாகியுள்ளது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை 2.18 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 80 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் கூறியுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் பொருள் சேதம் அல்லது உயிர் சேதம் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை. சமீப காலமாக இந்தோனேசியாவில் நிலநடுக்கம் அடிக்கடி ஏற்பட்ட வண்ணம் உள்ளது.