கியூபாவில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள்

November 11, 2024

கியூபாவில் இன்று தொடர்ந்து இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. முதல் நிலநடுக்கம் பர்டோலேமே மாசோ பகுதியில் ரிக்டர் அளவில் 5.9 என பதிவாகியது. இந்த நிலநடுக்கத்திற்கு ஒரு மணி நேரத்தில், அடுத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.8 ஆக இருந்தது. இரு நிலநடுக்கங்களின் தாக்கம் மக்கள் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது. நிலநடுக்கத்தின் மையம் கியூபாவின் பார்டோலோம் மாசோவில் இருந்து 25 மைல் (40 கிலோமீட்டர்) தெற்கே அமைந்திருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]

கியூபாவில் இன்று தொடர்ந்து இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

முதல் நிலநடுக்கம் பர்டோலேமே மாசோ பகுதியில் ரிக்டர் அளவில் 5.9 என பதிவாகியது. இந்த நிலநடுக்கத்திற்கு ஒரு மணி நேரத்தில், அடுத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.8 ஆக இருந்தது. இரு நிலநடுக்கங்களின் தாக்கம் மக்கள் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது.

நிலநடுக்கத்தின் மையம் கியூபாவின் பார்டோலோம் மாசோவில் இருந்து 25 மைல் (40 கிலோமீட்டர்) தெற்கே அமைந்திருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சாண்டியாகோ டி கியூபா, ஹோல்குயின், மற்றும் பெரிய நகரங்கள் உட்பட கியூபாவின் கிழக்குப் பகுதி முழுவதும் அதிர்வு உணரப்பட்டது. நிலநடுக்கத்தின் பிறகு, எந்த சுனாமி எச்சரிக்கையும் வெளியிடப்படவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu