ஐஸ்லாந்து - கடந்த 24 மணி நேரத்தில் 2200 நிலநடுக்கங்கள்

July 6, 2023

ஐஸ்லாந்து நாட்டில், நேற்று, 2200 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த தகவல் உலகம் எங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஐஸ்லாந்து தலைநகர் ரெய்க்யவிக்கில் இந்த நிலநடுக்கங்கள் பரவலாக உணரப்பட்டுள்ளன. மேலும், ரிக்டர் அளவுகோலில் சராசரியாக 4.1 அளவில் பெரும்பாலான நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இவற்றால், எரிமலை சீற்றம் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் மிகவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஐஸ்லாந்து நாட்டில் துடிப்புடன் இயங்கும் எரிமலைகள் உள்ளன. அந்த வகையில், இந்த நிலநடுக்கங்கள் மிகவும் […]

ஐஸ்லாந்து நாட்டில், நேற்று, 2200 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த தகவல் உலகம் எங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

ஐஸ்லாந்து தலைநகர் ரெய்க்யவிக்கில் இந்த நிலநடுக்கங்கள் பரவலாக உணரப்பட்டுள்ளன. மேலும், ரிக்டர் அளவுகோலில் சராசரியாக 4.1 அளவில் பெரும்பாலான நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இவற்றால், எரிமலை சீற்றம் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் மிகவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஐஸ்லாந்து நாட்டில் துடிப்புடன் இயங்கும் எரிமலைகள் உள்ளன. அந்த வகையில், இந்த நிலநடுக்கங்கள் மிகவும் அபாயமானதாக கருதப்படுகிறது. அத்துடன், வடக்கு அட்லாண்டிக் தீவு, மத்திய அட்லாண்டிக் ரிட்ஜ், ஐ யுரேசிய மற்றும் வட அமெரிக்க டெக்டோனிக் தகடுகளை ஐஸ்லாந்து பகுதி பிரிக்கிறது. எனவே, இங்கு, 24 மணி நேரத்தில் எண்ணில் அடங்கா நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதால் விஞ்ஞானிகள் அச்சமடைந்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu