ஈஸ்ட்போர்ன் சர்வதேச டென்னிஸ் தொடரில் அமெரிக்க வீரர் டெய்லர் பிரிட்ஸ் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இங்கிலாந்தில் ஈஸ்ட்போர்ன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீரர் டெய்லர் பிரிட்ஸ் மற்றும் சீன வீரர் ஷாங் ஜங்செங் மோதினர். இதில் பிரிட்ஸ் 7-6(7-5),7-6(7-5) என்ற நேர் செட் கணக்கில் வென்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அதன்படி இன்று நடைபெற உள்ள அரையிறுதி சுற்றில் ஆஸ்திரேலியா வீரர் அலெக்சாண்டர் வுகியுடன் டெய்லர் பிரிட்ஸ் மோத உள்ளார்.