இந்தியாவில் பிரபலமாக உள்ள வங்கி அல்லாத நிதி நிறுவனமாக, மனப்புரம் பைனான்ஸ் உள்ளது. இது கேரளாவை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்நிலையில், பண மோசடி தொடர்பாக, நிறுவனம் மீது புகார்கள் எழுந்து உள்ளதால், கேரளாவில் உள்ள பல்வேறு மணப்புரம் பைனான்ஸ் வளாகங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கிட்டத்தட்ட 150 கோடி ரூபாய்க்கும் மேலான பொதுமக்களின் வைப்பு பணத்திற்கு, முறையான ஆவணங்களைத் தேடி இந்த சோதனை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மத்திய ரிசர்வ் வங்கியின் ஒழுங்கு முறைகளின் படி, நிறுவனம் செயல்பட்டு வருகிறதா என்பதையும் உறுதி செய்ய உள்ளதாக கூறியுள்ளனர்.
மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் திருச்சூரில் உள்ளது. அந்த அலுவலகத்தையும் சேர்த்து, மொத்தம் 4 அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. முடிவுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.