ஜல் ஜீவன் மிஷன் ஊழல் தொடர்பான பணமோசடி விசாரணையில் ராஜஸ்தானில் 25- க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜல் ஜீவன் மிஷன் எனப்படும் வீடுகளுக்கு குடிநீந்ர குழாய் இணைப்பு வழங்கும் திட்டத்தில் நடைபெற்ற மோசடி தொடர்பாக ராஜஸ்தானில் மூத்த ஐஏஎஸ் அதிகாரியின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருக்கும் மாநிலங்களில் அமலாக்கத்துறை சோதனை என்பது குறிப்பிடத்தக்கது.