15 நிமிடங்களுக்குள் செய்திகளில் உள்ள பிழைகளைத் திருத்திக் கொள்ளலாம் - வாட்ஸ் அப்பில் புதிய வசதி அறிமுகம்

February 24, 2023

வாட்ஸ் அப் செய்திகளில் தவறுகள் இருந்தால், அதனை திருத்திக் கொள்ள 15 நிமிடங்கள் கொடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான தொழில்நுட்ப பணிகளில் வாட்ஸ் அப் நிறுவனம் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறான செய்திகளை 15 நிமிடங்களுக்குள் எடிட் செய்யும் வசதி விரைவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் வாட்ஸ் அப் பயனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த புதிய அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. பீட்டா பரிசோதனை கட்டத்தில், இந்த அம்சம் செயலாவது குறித்த ஸ்கிரீன் […]

வாட்ஸ் அப் செய்திகளில் தவறுகள் இருந்தால், அதனை திருத்திக் கொள்ள 15 நிமிடங்கள் கொடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான தொழில்நுட்ப பணிகளில் வாட்ஸ் அப் நிறுவனம் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறான செய்திகளை 15 நிமிடங்களுக்குள் எடிட் செய்யும் வசதி விரைவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் வாட்ஸ் அப் பயனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த புதிய அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

பீட்டா பரிசோதனை கட்டத்தில், இந்த அம்சம் செயலாவது குறித்த ஸ்கிரீன் ஷாட் ஒன்றை வாட்ஸ் அப் நிறுவனம் பகிர்ந்துள்ளது. வாட்ஸ் அப் நிறுவனத்தின் சமீபத்திய அப்டேட்டுகளை செயலாக்கினால், இந்த புதிய வசதி கிடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், ஐஓஎஸ் 23.4.0.72 வெர்ஷனில் இந்த புதிய அம்சம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu