இந்தியாவின் பிரபலமான இணைய வழி கல்வி நிறுவனமாக கியூமத் உள்ளது. இந்த நிறுவனம், தற்போது 100 பேரை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சி சார்ந்த மாற்றங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வருகை ஆகியவற்றின் காரணமாக, இந்த பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நிறுவனத்தின் வளர்ச்சியை எதிர்நோக்கி இந்த பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கியூமத் நிறுவனத்தின் தோற்றுநர் மனான் குர்மா தெரிவித்துள்ளார்.
கியூமத் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக தானே செயல்பட உள்ளதாக மனான் குர்மா தெரிவித்துள்ளார். மேலும், பணி நீக்கத்தால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் ஆதரவுகளை வழங்க தயாராக உள்ளதாக கூறியுள்ளார். அத்துடன், கணிதம் சார்ந்த கல்வி வழங்கலில் கியூமத் தொடர்ந்து முன்னிலையில் பணியாற்றும் என உறுதி அளித்துள்ளார்.