தமிழக பள்ளிகளில் புதியதாக 3 திட்டங்களை செயல்படுத்த கல்வித்துறை முடிவு

தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் திறந்த பின்பு மாணவர்கள் நலனுக்காக மூன்று திட்டங்களை செயல்படுத்த கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ம் தேதி திறக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் தூய்மை பணிகள், பராமரிப்பு பணிகள் ஆகியவை நடைபெற்று வருகின்றன. மேலும் இந்த கல்வியாண்டில் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தவும் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி முக்கியமாக 3 புதிய திட்டங்கள் செயல்படுத்த பட உள்ளது. முதலாவதாக மாணவர்கள் மத்தியில் போதை […]

தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் திறந்த பின்பு மாணவர்கள் நலனுக்காக மூன்று திட்டங்களை செயல்படுத்த கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ம் தேதி திறக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் தூய்மை பணிகள், பராமரிப்பு பணிகள் ஆகியவை நடைபெற்று வருகின்றன. மேலும் இந்த கல்வியாண்டில் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தவும் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி முக்கியமாக 3 புதிய திட்டங்கள் செயல்படுத்த பட உள்ளது. முதலாவதாக மாணவர்கள் மத்தியில் போதை பொருள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இரண்டாவதாக ஒரு கோடியே 25 லட்ச மாணவர்களின் தினசரி செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் வகையில் பெற்றோருக்கான வாட்சாப் குழு உருவாக்கப்பட உள்ளது. இதன் மூலம் மாணவர்கள் செயல்பாடுகள் பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்படும். இதுவரை 70 லட்சம் பெற்றோர்களின் எண்கள் இதில் இணைக்கப்பட்டு உள்ளது. மூன்றாவதாக மாணவர் கையில் கட்டும் வண்ணக் கயிறுகளுக்கு தடை விதிக்கபட உள்ளது. ஜாதி அடிப்படையில் வண்ணக் கயிறுகள் கட்டுவதால் மாணவர்களிடையே ஏற்படும் மோதலை தவிர்க்க கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட உள்ளன. பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu