தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் 5.75 பைசாவாக இருந்த முட்டை விலை 5 பைசா உயர்த்தப்பட்டு 5.80 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழக மற்றும் வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருவதாலும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளையொட்டி முட்டை தேவை அதிக அளவு ஏற்பட்டுள்ளதாலும் முட்டை விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. நாமக்கல் மண்டலத்திற்குட்பட்ட நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை, உள்ளிட்ட மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முட்டை கோழி பண்ணைகள் உள்ளன. இதில் சுமார் ஐந்து கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டு ஏற்றுமதிக்கும் போக மீதம் உள்ளவை கேரளாவில் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதில் பல நேரங்களில் முட்டை விலை உயர்ந்தது. மேலும் முட்டை விலை உயர்ந்தும் சரிந்தும் காணப்பட்டு வருகிறது. இதில் கடந்த 24ஆம் தேதி கோழிப்பண்ணை வரலாற்றில் ஒரு முட்டை விலை ரூபாய் 5.75 ஆக உயர்ந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற என்இ.சி கூட்டத்தில் முட்டை விலை 5 பைசா உயர்த்தப்பட்டு 5.80 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போன்று கறிக்கோழி விலை மூன்று ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டு 98 ரூபாயாக இருந்த கறிக்கோழி 101 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.மேலும் நாமக்கல்லில் நடந்த முட்டைகோகோழி பணியாளர்கள் கூட்டத்தில் முட்டை கோழி விலை கிலோ குறைக்க முடிவு செய்யப்பட்டு 88 ரூபாயாக இருந்த முட்டை விலை 80 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது