நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு

நாமக்கலில் கடந்த மூன்று நாட்களில் முட்டை விலை 60 காசுகள் உயர்ந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 5 கோடிக்கு அதிகமாக முட்டை உற்பத்தி செய்யப்பட்டு உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதற்கான விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்கிறது. அதன்படி பண்ணையாளர்களிடம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாமக்கல்லில் முட்டையின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த ஏப்ரல் முப்பதாம் தேதி 420 காசுகளாக இருந்த முட்டை விலை மே ஒன்றாம் தேதி […]

நாமக்கலில் கடந்த மூன்று நாட்களில் முட்டை விலை 60 காசுகள் உயர்ந்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் 5 கோடிக்கு அதிகமாக முட்டை உற்பத்தி செய்யப்பட்டு உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதற்கான விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்கிறது. அதன்படி பண்ணையாளர்களிடம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாமக்கல்லில் முட்டையின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த ஏப்ரல் முப்பதாம் தேதி 420 காசுகளாக இருந்த முட்டை விலை மே ஒன்றாம் தேதி 20 காசுகள் உயர்ந்தது. பின்னர் இரண்டாம் தேதி 20 காசுகள் உயர்ந்த நிலையில் மூன்றாவது நாளாக நேற்றும் 20 காசுகள் உயர்ந்துள்ளது. இதனால் நாமக்கல் பண்ணை கொள்முதல் விலை 480 காசுகளாக உயர்ந்துள்ளது. கடும் வெயிலின் காரணமாக முட்டை உற்பத்தி குறைவினால் விலை உயர்த்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சில்லறை கடைகளில் முட்டை 50 காசுகளுக்கு விற்கப்பட்டு வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu