முட்டை விலை ஒரே நாளில் 25 காசு உயர்வு

October 27, 2022

முட்டை விலை ஒரே நாளில், 25 காசு உயர்த்தப்பட்டுள்ளது. நாமக்கலில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில் முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். பின் 475 காசுக்கு விற்ற முட்டை விலையை 25 காசு உயர்த்தி 500 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. புரட்டாசி விரதம் முடிந்ததாலும், வடமாநிலங்களில் குளிர்காலம் துவங்கி தேவை அதிகரித்துள்ளதாலும், முட்டை கொள்முதல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 25 காசு அதிகரித்துள்ளதால் […]

முட்டை விலை ஒரே நாளில், 25 காசு உயர்த்தப்பட்டுள்ளது.

நாமக்கலில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில் முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். பின் 475 காசுக்கு விற்ற முட்டை விலையை 25 காசு உயர்த்தி 500 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.

புரட்டாசி விரதம் முடிந்ததாலும், வடமாநிலங்களில் குளிர்காலம் துவங்கி தேவை அதிகரித்துள்ளதாலும், முட்டை கொள்முதல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 25 காசு அதிகரித்துள்ளதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை 530 காசுகள் , ஹைதராபாத் 490 காசுகள், விஜயவாடா 495 காசுகள், பர்வாலா 493காசுகள், மும்பை 540 காசுகள், மைசூர் 510 காசுகள், பெங்களூரு 505 காசுகள், கொல்கத்தா 560 காசுகள், டில்லி 515 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், முட்டைக்கோழி விலையிலும், கறிக்கோழி விலையிலும் எந்த மாற்றமும் செய்யப்படாமல் அதே விலை நிர்ணயிக்கப்பட்டது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu