சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை வரை இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலானது நாகர்கோவில் வரை நீட்டிக்கப்பட உள்ளது.
சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செப்டம்பர் மாதம் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டது. இது தாம்பரம்,திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் வழியாக நெல்லைக்கு இயக்கப்பட்டு வருகின்றது. இதனிடையே இந்த ரயில் சேவையை நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர். பயணிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் நெல்லை சென்னை இடையே சிறப்பு ரயிலாக இயக்கப்பட்ட வாராந்திர ரயில் சேவை ஜனவரி 4ம் தேதி முதல் ஜனவரி 25ஆம் தேதி வரை வியாழக்கிழமைகளில் நாகர்கோவில் வரை இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.