ரஷ்யாவுக்கு 40000 ராக்கெட்டுகளை ரகசியமாக அனுப்பும் எகிப்து - அமெரிக்க உளவு தகவல்

April 11, 2023

எகிப்து நாடு, 40000 ராக்கெட்டுகளை தயாரித்து, அதனை ரஷ்யாவுக்கு ரகசியமாக அனுப்ப திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல் வெளிவந்துள்ளது. அமெரிக்க உளவுத்துறை இந்த தகவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக எகிப்து அதிபர் அப்தெல் ஃபட்டா அல் சிசி ராணுவத் துறை உயர் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தி வாஷிங்டன் போஸ்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெடிமருந்துகளை ரஷ்யாவுக்கு அனுப்பவும் எகிப்து திட்டமிட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. எனினும், மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்புகளை தவிர்க்க, அனைத்து திட்டத்தையும் ரகசியமாக வைத்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. […]

எகிப்து நாடு, 40000 ராக்கெட்டுகளை தயாரித்து, அதனை ரஷ்யாவுக்கு ரகசியமாக அனுப்ப திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல் வெளிவந்துள்ளது. அமெரிக்க உளவுத்துறை இந்த தகவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக எகிப்து அதிபர் அப்தெல் ஃபட்டா அல் சிசி ராணுவத் துறை உயர் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தி வாஷிங்டன் போஸ்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெடிமருந்துகளை ரஷ்யாவுக்கு அனுப்பவும் எகிப்து திட்டமிட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. எனினும், மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்புகளை தவிர்க்க, அனைத்து திட்டத்தையும் ரகசியமாக வைத்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

அமெரிக்க உளவுத்துறை குறிப்பிடும் ஆவணம் பிப்ரவரி 17ஆம் தேதியிட்டதாகும். இந்த தகவல் அமெரிக்க அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளை வியப்படைய செய்துள்ளது. மேலும், இந்த செய்தி உண்மையானால், எகிப்துடன் அமெரிக்கா வைத்திருக்கும் உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரஷ்யா எகிப்துக்கு செய்த உதவிக்கு பிரதிபலனாக, எகிப்து ரஷ்யாவுக்கு உதவ உள்ளதாக முகமத் சலால் அல் தின் என்ற ராணுவத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.அத்துடன், ரஷ்யாவில் இருந்து பெறப்படும் கோதுமையை எகிப்து அதிகரித்துள்ளது, எகிப்து ரஷ்யா பக்கம் இருப்பதை உறுதி செய்வது போல் உள்ளதாக கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu